Monday, March 27, 2006

இந்திய விஜயம் - 3

ஒருவாறாக விஸா வேலை முடிந்தது. வெளியே வந்து அடுத்த சந்தில் வெயிட்டிங்கில் இருந்த டாக்ஸியில் உட்கார்ந்தோம். குழந்தையை என் உறவுக்காரர்கள் யாருமே பார்த்திராததால் அங்கெல்லாம் போக வேண்டிய கட்டாயம். மிக முக்கியமாக என் பாட்டியிடம்(அம்மாவின் அம்மா) காண்பிக்க வேண்டுமென்பது என் ஆசை ...மரியாதையும் கூட. சரி எல்லாரையும் அப்படியே டாக்ஸியில் போய் பார்த்துவிட்டு வர கிளம்பினோம். பாட்டி.., ஏற்கனவே 80ஐ தாண்டிவிட்ட வயது. மூட்டு வலியினால் ...சிறிது நடக்க சிரமப்பட்டாலும்...நன்றாக கண் தெரியும். எல்லா பல்லும் இன்னும் சூப்பரா இருக்கு (வெத்தலை, பாக்கு தாத்தா இருக்கும் வரை ரெகுலராக உண்டு). நான் போகும் போது முறுக்கு சாப்டிண்டுருந்தா.
பாட்டி...நான் ராமச்சந்திரன் வந்திருக்கேன். நமஸ்காரம் பண்ணினோம். குழந்தையை ம்டியில வெச்சு கொஞ்சினா. அப்படியே உன்ன மாதிரி தாண்டா இருக்கு (வீட்டு அம்மணியின் முகம் சுருங்கியது...) சொல்லிட்டு சின்ன வயசுல ராமச்சந்திரன் அழகா இருப்பான், இப்பதான் வேலை...கீலைனு ரொம்ப அலைஞ்சு கருத்து போய்ட்டான்....(இப்போ அம்மணிகிட்ட பிரகாசம்). அப்படியே சென்னை அல்லாத ஊர்களில் வசிக்கும் மாமா & குடும்பங்களை பற்றி விசாரித்து விட்டு மற்றவை பேசி விட்டு கிளம்பினேன் (எனக்கு 8 மாமா & 1 சித்தி..எங்க அம்மாவுக்கு எல்லோருமே சிறியவர்கள்).


அப்படியே சென்னையில் உள்ள சித்தி, மாமாக்களை பார்த்து விட்டு...(மணி இரண்டாகி விட்டது)..கிளம்பினோம்.

"என்னங்க..டாக்ஸிதான் ஒருநாளைக்கு இருக்கே...மணி ரெண்டுதான் ஆறது...அப்படியே கடைக்கு போய்ட்டு போலாமா.." - அம்மணி
"எந்த கடைக்கு போகணும்....அதான்...நான் வரதுக்குள்ள(from US) போக வேண்டிய கடைக்குலாம் போய்ட்டு வந்த்துக்கோன்னு சொன்னேனே.." - நான்
"இல்ல...இன்னும் ரெண்டு கடைக்கு மட்டும் போகலை..அதான்.." - அம்மணி
"எந்த ரெண்டு கடை" - நான்
"குழந்தைக்கு பிறந்த நாளுக்கு ஏதாவது வாங்கலாம்...அப்படியே எனக்கும்..." - அம்மணி
"பாக்கலாம்...எந்த கடைனு சொல்லு.."-நான்
"நகை கடைக்கும்...டிரஸ் கடைக்கும்.."-அம்மணி..(இப்போது டிரைவர் நமுட்டு சிரிப்பு)

என்க்கு காலுக்கு கீழ் பூமி நழுவியது...பகவானே என்னை காப்பாத்து. சட்டென்று நியாபகம் வந்தது..சென்னையின் பழைய நண்பர்களுடன் போனில் பேசதான் முடிநதது..(மழை & Consulate appointment).நேரில் பார்க்கவில்லை. விசா வேலைக்கு அடுத்தநாள் ஊருக்கு(திருநெல்வேலி) வேறு ட்ரெயினில் டிக்கட் முன்கூட்டியே பண்ணி வெச்சாச்சு. அதனால் விசாவேலை முடிந்த அன்று சாயந்திரம் தாம்பரம் வர சொல்லி இருந்தேன்.

இங்க பாரு..மணி இப்பவே ரெண்டை தாண்டியாச்சு. தாம்பரம் போய்ச்சேர எப்படியும் 3க்கு மேல ஆயிரும். 5 மணி போல ப்ரெண்ஸை வரச்சொல்லியிருக்கேன். இப்ப கிளம்பினாதான் ச்ரியா இருக்கும். குழந்தை வேற காலம்பரலேர்ந்து ரெஸ்ட் இல்லாம இருக்கு.இன்னும் நாளைக்கு வேற 12மணி நேரம் ட்ரெயின்ல வேற போணும். ஸோ இன்னிக்கு இனிமே கஷ்டம்..ட்ராபிக் கூடறதுக்கு முன்னாடி போய் சேர்ற வழிய பாக்கலாம். நாளைக்கு வேணா உங்க மன்னிய காலம்பரயே கூட்டிண்டு போய் என்ன வேணும்னாலும் வாங்கிக்கோ.
அம்மணிகிட்ட நோ ரியாக்ஷன் ...வண்டி தாம்பரம் நோக்கி சென்றது. நண்பர்கள் சொன்னபடி வந்தார்கள். பேசிவிட்டு விடை பெறும்போது ந்ள்ளிரவை தாண்டி விட்டது.

மறுநாள் அம்மணிக்கு போக முடியலை.. ஊருக்கு கெளம்ப வேண்டியிருந்ததால்...பேக்கிங்கிற்கு (already existing பட்டு புடவை & நகை) மட்டுமே நேரம் சரியாக இருந்தது. கிளம்பி ட்ரெயினை பிடித்து உட்கார்ந்தாச்சு. First Class 2 tier sleeper..(2 வேறு முகங்கள்) சரி குழந்தை நைட் அழுததுனா அவங்களுக்கு வேற trouble-ஆ இருக்குமேன்னு யோசிச்சேன். T.T யிடம் போய் கூபே இருக்குமா ஸார்..குழந்தை வேற இருக்கறதுனால...ப்ரைவஸியா இருந்தா வசதியா இருக்கும்னு சொன்னேன். அந்த 2வது கூபேல இருக்கறவங்க Railway Staff தான்...திண்டிவனத்துல எறங்கிருவாங்க...அப்ப மாறிக்கோங்கனு சொன்னார். திண்டிவனத்தில் மாறினோம். ஒரு 5நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது. திறந்தேன்...T.T என்னசார் மாறிட்டீங்களா...OKயா...என்று சொறிந்தார்...சொறிக்கு ம்ருந்து குடுத்துவிட்டு...சாப்டு விட்டு கண்ணயர்ந்தேன். முழித்த பொழுது...மணியாச்சி ஸ்டேஷன். திருநெல்வேலிக்கு இன்னும் ஒரு ஸ்டேஷன் தான் பாக்கி. மனைவியிடம் சொல்லி திருநெல்வேலியில் இறங்குவதற்கு ஆயத்தமானோம்.

Friday, March 24, 2006

நன்றி கொன்றார்க்கு உய்வில்லை.

அடுத்த "இந்திய விஜயம்" - க்கு முன்னாடி ஒரு "ஓ" போடலாமென்று தோன்றியது.

முதலில் "டுபுக்கு" - விற்கு.

"ப்ளாக்" என்றால் ஏதோ ஹாலிவுட் படம் போல நெனச்சிருந்தேன் (சத்தியமா என்னனே எனக்கு தெரியாது). வழக்கமாக சில மாத இடைவெளிகளில் நண்ப, நண்பிகளுக்கு நான் அமெரிக்காவிலிருந்து போன் செய்வதுண்டு. அப்படி ஒரு நண்பியிடம் (சென்னை) பேசிய போது டுபுக்குவின் ப்ளாகை பற்றி சொல்லி, உங்க ஊர்காரர் தான் (என்க்கும் தாமிரபரணி கரைதான்) போய் பார் ரொம்ப புடிக்கும்னு சொன்னா.

அப்போ ஆபிஸ்ல இருந்தேன். சரி என்னதான் இருக்கு போய் பாக்கலாம்னு அவ சொன்ன link போய் பாத்தேன். எனக்கு சுஜாதாவின் நடை (எழுத்தாளரின் எழுத்து நடை) பிடிக்கும்.டுபுக்குவும் அந்த ரேஞ்சில் அசத்தியிருந்தார். ஒரே மூச்சில் நிறைய படித்து முடித்தேன். தாமிரபரணில அவர் எந்த கரைனு விசாரிக்கலாம்னு நெனச்சு (எனக்கு அப்போ கமென்ட் சிஸ்டம் பத்தி ரொம்ப தெரியாது) அவரோட அரத பழைய ஒரு போஸ்டிங்ல போயி எந்த ஊரு உங்க ஈ-மெயில் அட்ரஸ் குடுங்கனு கேட்டிருந்தேன்.

ஒரு வாரமா நான் குடுத்த என்னோட ஈ-அட்ரஸ்க்கு பதில் இல்ல. அப்புறம் திடீர்னு அவர் கிட்ட இருந்து ஈ-மெயில் வந்த்தது. மனுஷன் ரொம்பவும் அடக்கம். "என்னோட தகவல் நீங்க ஏதோ முன்னாடி போஸ்டிங்ல கேட்டு இருந்தீங்க போல...நான் உடனடியா கவனிச்சு பதில் போடமுடியலை.. தப்பா நினைக்காதீங்க...இதுதான் என்னோட தொடர்பு தகவல்கள்"னு சொல்லி பதில் போட்டு இருந்ந்தார். அவரோட அடக்கத்தை நெனச்சு பெருமையா இருந்தது. போன் பண்ணினேன். சில வினாடிகள் (பரஸ்பர அறிமுகம்) தான்..பின் ஏதோ நீண்ட கால நண்பர் போல சகஜமாக உரையாடினோம். பின் ரெகுலர் இன்டர்வலில் இன்றுவரை உரையாடிக்கொண்டு இருக்கிறோம்.

அப்படி பேசிக்கொண்டிருக்கும் போது தான் அந்த விபரீத எண்ணம் வந்த்து.

"ராம் நீங்களும் ப்ளாக் ஆரம்பிச்சு எழுதினா என்ன ?" - டுபுக்கு

"இல்ல...நான் நல்ல பேசுவேன்...ஆனா மனசுல உள்ளத ஒழுங்கா எழுத வராது"-நான்

"மொதல்ல அப்படிதான் இருக்கும்...எழுத எழுத தானா நல்ல வரும்...எழுதுங்க"-டுபுக்கு

"சரி பாக்கலாம்.."-நான்.

அப்புறம் சில மாதங்கள் ஓடியது. திரும்பவும் அதே பேச்சு எங்களுக்குள் எழுந்தது. நான் ..சரி எழுதறேன்.. இப்ப இல்ல...நவம்பர்ல இந்தியா போறேன்...அந்த ட்ரிப்பை முடிச்சு அதுலயே ஏதாவது எழுத ஆரம்பிக்கிறேன்னு சொன்னேன்.

ஆனால் ஆர்வக்கோளாறு யாரை விட்டது. ஒரு ப்ளாக் க்ரியேட் பண்ணி நான் எலிமென்ட்ரி ஸ்கூல்ல படிச்ச போது நடந்த சம்பவத்திலிருந்து எழுத ஆரம்பிக்க தீர்மானித்து 3 பக்கங்கள் எழுதினேன். பிழை திருத்தி போஸ்ட்டும் செய்தேன். கொஞ்ச நேரம் இடைவெளி விட்டு நானே படித்து பார்த்தேன். எனக்கே ரொம்ப கேவலமாக தெரிஞ்சது. நானே என் மனதுக்குள் துப்பிக்கொண்டு இரண்டாம் கட்ட யோசனை எதுவும் செய்யாமல் delete பண்ணிவிட்டேன்.

அடுத்தமுறை டுபுக்குவிடம் பேசும் போது இதைப்பற்றி சொன்னேன். "ஏன் அப்படி பண்ணிணீங்க...அது பாட்டு இருந்திருக்கலாமே" அப்படின்னு சொன்னார். என் அதிருப்தியினாலதான் அப்படி செஞ்சதை சொல்லி...கண்டிப்பா இந்தியா ட்ரிப்புக்கு அப்புறம் எழுதறேன்னு சொன்னேன்.

இந்தியா போய்ட்டு வந்த்தும் மனுஷன் நியாபகமா கேட்டார். அப்படி ஆரம்பிச்சதுதான் இந்திய விஜயம்.

சொறிஞ்ச கை சும்மா இருக்குமா. டுபுக்குவை உடனே கூப்பிட்டு ...ப்ளாக் போஸ்ட் பண்ணிட்டேன்...போய் பாருங்கனு அரிச்செடுத்தேன். மனுஷன் பாத்துட்டு முதல் கமென்ட் (மன சாட்சிக்கு விரோதமா) "ராம்...சூப்பர்...கலக்குங்க"னு...எழுதினார். அதேதான் இந்திய விஜயம் - 2 க்கும் நடந்தது.


இப்படி என்னையும் கொஞ்சம் எழுத வெச்சு...மனுஷன் அதையும் படிச்சு..இன்னும் தைரியமா (தன் முயற்சி தளராத விக்ரமாதித்தன் மாதிரி) எழுத என்னை ஊக்குவிக்கிற நண்பர் டுபுக்குவிற்கு முதல்..."ஓ".

அடுத்து daydreamer & ambi
நானே நான் எழுதினதை போய் பாத்து பாத்து...என் ப்ளாகிற்கு "ஹிட்" கன்னா பின்னாவென்று எகிரிக்கொண்டிருந்த சமயத்தில்...திடீர்னு வந்து படித்து (They might have got much bored on that day I believe...still they left the comment as I'm writing good) கமென்ட் விட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த இவங்க ரெண்டு பேருக்கும் அடுத்த ஓ.. மிக்க நன்றி.

இனி தப்பித்தவறி detour எடுத்து accident-ஆ வந்து படிக்கப்போற அனைவருக்கும் முன்கூட்டிய "ஓ"...

சீக்கிரம் அடுத்த இந்திய விஜயத்தில் சந்திக்கும் வரை..நன்றியுடன் விடை பெறுகிறேன்.

பி.கு:- நான் எழுதுவது இன்னும் என் வீட்டு அம்மணிக்கு சுத்தமா தெரியாது. எவ்வளவு நாள் நக்கல் கிண்டலில் இருந்து தப்பிக்க முடியும் தெரியலை. அம்மணியோட அண்ணணுக்கு தெரியும்..(டுபுக்குவோட ப்ளாக்கிற்க்கு போய்...அப்படியே அந்த கமென்ட்டுக்கும் போய்...என் லிங்க் ஐ புடிச்சுருக்கான்)...போனில் பேசும் போது என்னிடம் கேட்டான்.. எப்படி கண்டுபிடிச்சனு நான் கேட்டேன்... 1ம் 1ம் ரெண்டுனு இந்த உலகத்துல தெரியாதவன் ...நீ ஒருத்தன் தான்னு பதில் சொன்னான்.

Thursday, March 02, 2006

இந்திய விஜயம் - 2

தாம்பரத்தில் இவர்கள் வீடு உள்ளடிங்கிய ஏரியாவில் இருந்தது. பஸ் / ட்ரெய்ன் எது பிடிக்கணும்னாலும் ஆட்டோலதான் போகணும். ஏன் ஒரு ஆட்டோ பிடிக்கவே இன்னொரு ஆட்டோ பிடிச்சுதான் போகணும். சரியான மழை வேற. ஏரியால இருந்த தண்ணிக்கு ஆட்டோ கூட வர மறுத்தார்கள். ஒரே வழி டூ வீலர்தான். அதுக்கும் ஒரு கஷ்டம் இருந்த்து.மழை மூடிய ரோடின் அந்தரங்கங்களை நன்றாக தெரிந்தவர்கள்தான் போக முடியும். இல்லைனா...நிறைய ஆறடி நிலம் சொந்தமாக வாய்ப்பு.

வெளியில் எங்கும் செல்லவில்லை. இரண்டு நாளில் யூ.எஸ் கான்ஸுலேட் அப்பாயின்ட்மென்ட் வேறு.அதுக்குள்ள மழை நிற்பேனா பார் என மிரட்டியது. என் கஸினிடம் (Note : கஸின், Not அஸின்) சொல்லி விசாக்குரிய D.D எடுத்து வைக்க சொல்லியிருந்ததால்...அந்த வேலை மிச்சம். ஒருவாறாக மழை நின்றது. டாக்ஸி அமர்த்தி (ஒரு நாள் வாடகைக்கு) நான், மனைவி & மகள் ...கிளம்பினோம். நிறையவே முன்ன்னாடி கிளம்பியும் கரெக்ட் டைமுக்குதான் போக முடிந்தது. அப்பாயின்மென்ட் லெட்டர் & பாஸ்போர்ட் பார்த்தார்கள். ஒரு குண்டை தூக்கி போட்டார்கள்.

அப்பாயின்ட்மென்ட் உங்களுக்கும், உங்க வைஃபுக்கும்தான்...(உண்மையும் அதுதான்)...அதுனால உங்க குழந்தைய உள்ள கூட்டிட்டு போக முடியாது. (ஆக்சுவலா இது நண்பண் குடுத்த ஐடியா...குழந்தைய கூட்டிட்டு போனா...க்யூல நிக்க வேண்டாம்...வேலை சீக்கிரம் முடியும்னு சொன்னான்)..
சரி இப்ப என்ன பண்ணலாம்னு மண்டைய உடைச்ச போது அந்த ஐடியா வொர்க்வுட் ஆச்சு. ஸார் என் குழந்தை அமெரிக்கா-ல தான் பொறந்ததது. அமெரிக்கன் சிடிசன் தான். - அதுனால உள்ள போக ஸ்பெஷல் அப்பாயின்ட்மென்ட் தேவை இல்லைனு சொன்னேன்.


அவன் உள்ளார போயி யார்கிட்டயோ டிஸ்கஸ் பண்ணிவிட்டு வந்தான். என்னிடம் .."குழந்தையோட அமெரிக்கா பாஸ்போர்ட் இருக்கானு கேட்டான் (என்னிடம் ஒரு வழக்கம் உண்டு. பாஸ்போர்ட் விசா சம்பந்தமா போனா தேவையிருக்கோ இல்லியோ ஃபேமிலி யோட மொத்த பாஸ்போர்ட்டும் ஒன்னுபோல வெச்சிருப்பேன்). காண்பித்தேன்...அப்பாடா...உள்ளே விட்டார்கள். உண்மையிலேயே குழந்தை இருந்ததால் ஸ்பெஷலாக (No..Queue)கவனித்தார்கள் நண்பணுக்கு ஜே..சொன்னேன். கடைசியில் க்ளைமேக்ஸ்..விசா தீர்மானிக்கும் கவுன்ட்டர் (ஜாதி இல்ல...கூண்டு). டாகுமென்ட் கேட்டர்கள். ஒவ்வொன்றாக கொடுத்துக்கொண்டு வந்தேன். கடைசியில் I-129 இருக்கா என்று கேட்டார்கள். அது என்னிடம் இல்லை. அது என்ன எழவுன்னும் அப்ப டென்ஷனில் தெரியவில்லை. அப்புறம் குடைய ஆரம்பித்தார்கள்.

எத்தனை வருஷமா அமெரிக்கால இருக்க..?
7 வருஷமா..இருக்கேன்...(நான்)

இந்த அட்ரஸ்-ல (தற்போதைய அமெரிக்க முகவரி) எத்தன வருஷமா இருக்க..?
கிட்டதட்ட அஞ்சு வருஷமா...

உன் Wife...வேலை பாக்கிறாளா ?
இல்ல... House Wife தான்...

உன் Wifeஎங்க ?
(அப்பதான் கவனித்தேன்.. குழந்தை அழுகிறதென்று சற்று ஓரமாக நின்று சமாதானபடுத்திக்கொண்டிருந்தாள்...விசா கேள்வி டென்ஷனில் நான் கவனிக்கலை)..அவளை வ்ருமாறு சைகை செய்தேன்..(குழந்தையுடன்) வந்தாள்..

குழந்தை ...உங்க குழந்தையா ?


ஆமாம்.



குழ்ந்தைக்கு விசா அப்ளிகேஷன் இல்லியே ?


அவ...அமெரிக்கன் சிடிசன் (பாஸ்போர்ட் காண்பித்தேன்).



ஓ...ஷீ இஸ் வெரி க்யூட்...


தேங்க்ஸ்...


மேற்கொண்டு கேள்வி ஏதும் இல்லை....We have approved Your Visa..You will receive your stamped passport within a week thru the courier at the local address you've mentioned in the application form.

தேங்க்யூ...

குழந்தைக்கு...பெரிய...உம்மா கொடுத்து விட்டு ...கான்ஸுலேட்டை விட்டு கிளம்பினேன்.