Wednesday, April 12, 2006

இந்திய விஜயம் - 5

என் வீட்டிலிருந்து நயாகரா போய்சேர 20நிமிடம் பிடித்தது. பார்க்கிங் ஏரியாவில் வண்டியை பார்க் செய்து விட்டு மாடி ஏறி போனோம். செக்யூரிட்டியின் சல்யூட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம். ஆர்யாஸ் சமீபத்தில் எப்படி உள்ளது என்று எனக்குத் தெரியாது. நான் 2 அல்லது 3 வருடத்திற்க்கு முன் பார்த்த ஆர்யாஸ் பாரை விட இது கொஞ்சம் பெரிதாக தெரிந்தது.

அரைஇருட்டு. (இலவச கொத்ஸ்) கலர்கலரா பல்ப்லாம் எரியல...இருந்த பல்பும் P.C. ஸ்ரீராம் லெவல்ல தான் எரிந்துகொண்டிருந்தது. ஒரு பெரிய LCD(Projection?) டிவி வைத்து...அதில் தமிழ் குத்து பாட்டு விசிடி ஓட்டிக்கொண்டு இருந்தார்கள். பாட்ட ரஸிக்கறவங்களுக்கு எடுபடாத ஒரு லெவல்ல வால்யூம் காதை அடைத்தது. நிறைய இளவட்டங்கள் (போன ப்ளாக்லயே சொன்னேனே. .. நிறைய பேர் ஏதாவது வேலையில் இருக்கிறார்கள் என்று), கல்லூரி மாணவர்கள். பெண்கள் வரும் அளவுக்கு இன்னும் நெல்லை கலாச்சாரம் முன்னேறவில்லை.

நான் முடிந்த மட்டும் நண்பர்கள் பெயரை தவிர்த்தே இனி சம்பவங்களை சொல்கிறேன். ஆறு பேருக்கு தோதான இடத்தில் உட்கார்ந்தோம். வழக்கமாக இரண்டு பெருக்கு இடையில் தான் வாக்குவாதம் / வாய்ச்சண்டைகள் வரும் (முதல்லயே ஆர்யாஸா நயாகராவானு பேசிக்கிட்டாங்களே ..அவங்கதான்). மீண்டும் ஆரம்பித்தார்கள்.

டேய்...இஙக டாய்லெட் எங்க இருக்குன்னு இப்பவே கேட்டு வெச்சிக்க...உனக்கு ஒரு மடக்கு பீர் அடிச்சாலே (நண்பன் பீர் மட்டும் தான் குடிப்பான்) ஒரு பாட்டில் ஒன்னுக்கு இருக்கனும். கடைசி நிமிஷத்தில் தேடிட்டு அடக்கமுடியாம பாரை நாசம் பண்ணிராத.

போல...நான் பரவாயில்ல... ஒன்னமாரி குடிச்சுட்டு வாந்தி எடுக்கதுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல

ஏலேய் உங்க எழவ..இன்னூரு நாள் வெச்சிக்கோங்களேம்ல.. (சண்டை முற்றி பார்ட்டி கேன்ஸல் ஆகி விடக்கூடாதே என்ற கவலையில் இன்னொருவன்).

சிறிது அடங்கினார்கள். வெய்ட்டர் வந்தார். ஆர்டர் எடுத்தார். நான் Sandpiper பீர் (இந்தியா செல்வதற்க்கு முன்னமே இந்த பிராண்ட் பற்றிய தகவல் வந்தது) சொன்னேன் (நண்பர்களுடன் சேர்ந்தால் மட்டும் நான் பீர் அல்லது வைன் குடிப்பதுண்டு. குரு டுபுக்கு அவர்களே..பின்னூட்டத்தில் "வீட்டு அம்மணிக்கு தெரியுமாவே" அப்படின்னு கேட்டு மிரட்ட வேண்டாம். என்னைப் பற்றி அ...ஆ எல்லாம் அம்மணிக்கு மட்டுமல்லாது, எங்க மற்றும் அவங்க வீட்டிலும் எல்லாருக்கும் தெரியும் நான் எல்லாவற்றிலும் அளவு என்பதால் எதையும் மறைத்ததில்லை).

பீர் நண்பன் "புல்லட்" ஆர்டர் செய்தான். "உன் உடம்புக்கு(நண்பர் மிகவும் ஒல்லி) சைக்கிளே ஜாஸ்தி...இதுல புல்லட் வேற... எழவு இந்த புல்லட் பீர எப்பிடிதான் குடிக்கானோ...அதுக்கு பேசாம சாக்கடை தண்ணிய குடிக்கலாம்". சண்டை பார்ட்டி மீண்டும் ஆரம்பித்தான்.

இவன் பதில் பேச எத்தனிப்பதற்குள் முதலில் சண்டையை தற்காலிகமாக அமைதிப்ப்டுத்தியவன்... எய்யா... தயவுசெஞ்சு.. கொஞ்ச நேரம் பொத்திக்கிட்டு இருங்க..மனுஷன் நிம்மதியா ஆர்டர் பண்ணிக்கறேன்.

ஆர்டர் முடிந்தது.

நான் க்ரெடிட் கார்டு Accept பண்ணுவார்களா என்று வெய்ட்டரிடம் கேட்டேன். Accept பண்ணிப்போம் சார்...3% surcharge உண்டு என்றான். நான் அது பரவாயில்லை என சொல்லி ஆர்டரை சீக்கிரம் கொண்டு வரும்படி சொன்னேன். வெய்ட்டர் மறைந்தார்.

நான் க்ரெடிட் கார்டு 3% எக்ஸ்ட்ராக்கு ஓ.கே சொன்னதும் பேச்சு என் பக்கம் திரும்பியது. மக்கா உனக்கு மாசத்துக்கு என்ன ஒரு 1 லட்ஷம் சம்பளம் இருக்குமா? (இவனிடம் ரொம்பவும் பொய் சொல்ல முடியாது...இவன் சொந்தகாரன் என்னைத்தெரிந்த இரண்டு பேர் யூ.எஸ்-ல் இருக்கிறார்கள்)

"டாக்ஸ் எல்லாம் போக ஒரு ஒன்னே கால் வரும்".- நான்.

ஏ...யப்பா ..பரவாயில்லியேல..(நான் பார்ட்டி கொடுப்பது என்னுடைய தலையாய கடமைகளில் ஒன்று போல நினைத்தான்)

பின் நான் வீட்டு வாடகை, மாத செலவு, கார் இன்ஷுரன்ஸ், பெட்ரோல், ஹெல்த் இன்ஷுரன்ஸ் எல்லாம் விவரித்தேன். அப்படி இருந்தும் எனக்கு என்னவோ அநாவசியமாக நிறைய சம்பளம் கொடுப்பதாகதான் அவர்கள் நினைப்பதாக தெரிந்தது.

இப்போ பேச்சு திரும்பியது.
மாப்ள...வெள்ளைக்காரிலாம் எப்படி அங்க..?
எப்படின்னா...எப்படி? - நான் கேட்டேன்.
இல்ல..யாரையாவது கிஸ்லாம் பண்ணிருக்கியா? எங்க ஊர் தரத்துக்கு வரும் ஜேம்ஸ்பாண்ட் மற்றும் Sex & Aids ரீதியிலான இதர ஆங்கில மருத்துவ படங்களில் வருபவளை போலத் தான் (பார்த்ததும் ஒரு 2 செகன்ட் பேச்சு ...பின் கிஸ்) எல்லா வெள்ளைக்காரிகளும் என நினைப்பு . கிட்டதட்ட "உயரான் ஒருமிக்கான்" லெவல் படங்கள்..

எனக்கு இதை எப்படி அவர்களுக்கு விளக்க என புரியவில்லை. பின் ரத்னசுருக்கமாக "அதெல்லாம் வெள்ளைக்காரி வெள்ளைக்காரன் கூட மட்டுந்தான் அப்படி இருப்பா" எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்தேன்.

ஆர்டர் பண்ணிய சரக்கு(கள்) வந்தது. நயாகரா Choose பண்ணியவன் சொன்னதை போலவே ஏராளமான நொறுக்கு தீவனங்களும் வந்தன. தீவனத்துடன் பழைய நினைவுகளையும் அசைபோட்டோம் (80களில் ஒன்றாக இருந்த பேச்சிலர் லைஃபிலிருந்து முன்னேறி கல்யாண வாழ்க்கை வரை வந்து நின்றது. அதை தனி போஸ்ட்-ல சொல்லி இன்னும் பத்து தலைப்பு ஓட்டுவோம்ல...).

சண்டைபார்ட்டி இருவரில் ஒருவன் ஏதும் தொடவில்லை (குடிப்பதை விட்டாச்சாம்). அவன் கல்யாணத்து முந்தின நாள் வரைக்கும் "குடி சூப்பர் 10"-ல் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தவன். வாந்தியே எடுத்து வயிறு ஒண்டிபோயி காய்ஞ்சாலும் பரவாயில்லை ..எல்லோரையும் விட ஒரு துளி மட்டா குடித்தாலும் உயிர்நீக்கும் மான இனத்தை சேர்ந்தவன். எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. விசாரித்ததில் மனைவியின் கடாட்ஷம் (கல்யாணம் ஆகி ஒரு வருடம் இருக்கும்) பின்னனியில் இருந்தது தெரியவந்தது.

இப்ப பீர் பார்ட்டி ..திருந்திய பார்ட்டியை பார்த்து...என்னல இப்படி சொட்டு கூட குடிக்காம ராமசந்திரன இன்ஸல்ட்(?) பண்ற. அவ்ளோ தூரத்துலேர்ந்து நமக்காக (தண்ணியடிக்க?) வந்திருக்கான்.. கொஞ்சமாவது சாப்டு...அவனுக்கு சந்தோஷமா இருக்கும்ல...அதற்கு இவன் "எவம்ல இவன்...சொன்னா புரிஞ்சுக்க...வீட்ல நெலம சரியில்லனா விடேன்...உனக்கு என்ன ரெண்டு ஈனு ஈத்திட்ட (எங்க ஊர் வழக்கப்படி மாடு கன்னுக்குட்டி போட்டால் கன்று ஈனிருக்கு என சொல்வார்கள்...இங்க பீர் பார்ட்டிக்கு ரெண்டு ஆண் பிள்ளைகள்)...உன்னலாம் வீட்ல தண்ணீதொளிச்சு விட்டாச்சு...எங்களுக்கு அப்படியா..இனிமே தான் எல்லாம் இருக்கு..வன்ட்டான் பாரு...எழவுக்கு கம்பெனி சேக்க".

பீர் பார்ட்டி மேற்கொண்டு ஏதும் பேசவில்லை.

நேரம் கடந்தது...அங்கேயே சாப்பாடும் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு முடித்தாகி விட்டது. மணி பதினொன்னரை. சரி வீட்டுக்கு கிளம்பலாம் என ஏகமனதாக முடிவெடுத்து...பில்லை செட்டில் செய்வதற்காக வெய்ட்டரிடம் சைகை செய்தேன். பில்லுடன் வ்ந்தார். டிப்ஸ் எல்லாம் சேர்த்து எழுதி கார்டில் செலுத்திவிட்டு கிளம்பினோம். நண்பன் எவ்ளோ ஆச்சு என (information sake) கேட்டான். பின் இன்னோருநாளும் இப்படி வரவேண்டும் என சொன்னான்.

"எதுக்குல அவனுக்கு (எனக்கு) செலவு வைக்க...அதான் இன்னிக்கி வந்தாச்சுல்லா.." - பீர் பார்ட்டி.

அதற்கு மீண்டும் நேயர்விருப்பம் கேட்ட நண்பர் "அவன் குடுக்கப்போற டாலர்-ல இதுலாம் கொசு மாதிரி..(முதல்ல சம்பளம்..இதர விபரங்கள் சொன்னதின் பலன்) ...இதே மாதிரி 10 தடவ கூட வரலாம்...

யப்பா...இதுக்கு ஒரிஜினல் நயாகராவே போறது cheap என நினைத்து... இடத்தை காலி செய்தேன்(தோம்).

7 Comments:

Blogger ambi said...

நெல்லை வட்டார தமிழை அப்படியே கொண்டு வந்துடேளே....(இது மனம் திறந்து சொல்வது, பிளாக் promotion technique எல்லாம் இல்லை.)

//"அதெல்லாம் வெள்ளைக்காரி வெள்ளைக்காரன் கூட மட்டுந்தான் அப்படி இருப்பா"//
sema timingku thala!

Saturday, April 15, 2006  
Blogger Paavai said...

very vivid descriptions... nice post

Monday, April 17, 2006  
Blogger daydreamer said...

summa nayagara neerveezhchi mathiri kottudhe ezhuthu blog la.. super sir

Monday, April 17, 2006  
Blogger [ 'b u s p a s s' ] said...

// அவ்ளோ தூரத்துலேர்ந்து நமக்காக (தண்ணியடிக்க?) வந்திருக்கான்.. //

ஹா... இப்படி எதாவது சொல்லி convince பன்ற மக்கா நெறைய பேரப்பூ...

cheers.

Thursday, April 20, 2006  
Blogger Karthik Kumar said...

kalasiringa sir.
Nanum dubukku mulama than inga vanden.

nalla eluduringa.

-karthic

Thursday, April 20, 2006  
Anonymous Anonymous said...

>>அப்படி இருந்தும் எனக்கு
>>என்னவோ அநாவசியமாக நிறைய >>சம்பளம் கொடுப்பதாகதான்
>>அவர்கள் நினைப்பதாக தெரிந்தது.


-போச்சு அங்கயும் உண்மை தெரிஞ்சுபோச்சா? :P

ரொம்ப டெக்னிகலா எழுதியிருக்கீங்க...நமக்கு தண்ணி பற்றி அவ்வளவு ஞானம் கிடையாது

Friday, April 21, 2006  
Blogger இராமச்சந்திரன் said...

@ ambi => ப்ளாக் ப்ரமோஷன் டெக்னிக் இல்லைனு சொல்றதும் ஒரு டெக்னிக்தான்..இல்ல...?

@ paavai = > மெய்யாலுமா சொல்றீங்க....ஹீ...ஹீ....தாங்க்ஸ்

@ daydreamer => எழுதும் போது...நிஜமா தண்ணியடிக்கலீங்க.. நம்புங்க.

@ [ 'b u s p a s s' ] => நம்ம எந்த convince-க்கும் மசிய மாட்டோம்ல. Always steady.

@ karthic kumar => Welcome sir. Thanks for coming.

@ dubukku => குரு...அனுபவம் தான் ஞானம்...

Wednesday, May 10, 2006  

Post a Comment

<< Home