Monday, March 27, 2006

இந்திய விஜயம் - 3

ஒருவாறாக விஸா வேலை முடிந்தது. வெளியே வந்து அடுத்த சந்தில் வெயிட்டிங்கில் இருந்த டாக்ஸியில் உட்கார்ந்தோம். குழந்தையை என் உறவுக்காரர்கள் யாருமே பார்த்திராததால் அங்கெல்லாம் போக வேண்டிய கட்டாயம். மிக முக்கியமாக என் பாட்டியிடம்(அம்மாவின் அம்மா) காண்பிக்க வேண்டுமென்பது என் ஆசை ...மரியாதையும் கூட. சரி எல்லாரையும் அப்படியே டாக்ஸியில் போய் பார்த்துவிட்டு வர கிளம்பினோம். பாட்டி.., ஏற்கனவே 80ஐ தாண்டிவிட்ட வயது. மூட்டு வலியினால் ...சிறிது நடக்க சிரமப்பட்டாலும்...நன்றாக கண் தெரியும். எல்லா பல்லும் இன்னும் சூப்பரா இருக்கு (வெத்தலை, பாக்கு தாத்தா இருக்கும் வரை ரெகுலராக உண்டு). நான் போகும் போது முறுக்கு சாப்டிண்டுருந்தா.
பாட்டி...நான் ராமச்சந்திரன் வந்திருக்கேன். நமஸ்காரம் பண்ணினோம். குழந்தையை ம்டியில வெச்சு கொஞ்சினா. அப்படியே உன்ன மாதிரி தாண்டா இருக்கு (வீட்டு அம்மணியின் முகம் சுருங்கியது...) சொல்லிட்டு சின்ன வயசுல ராமச்சந்திரன் அழகா இருப்பான், இப்பதான் வேலை...கீலைனு ரொம்ப அலைஞ்சு கருத்து போய்ட்டான்....(இப்போ அம்மணிகிட்ட பிரகாசம்). அப்படியே சென்னை அல்லாத ஊர்களில் வசிக்கும் மாமா & குடும்பங்களை பற்றி விசாரித்து விட்டு மற்றவை பேசி விட்டு கிளம்பினேன் (எனக்கு 8 மாமா & 1 சித்தி..எங்க அம்மாவுக்கு எல்லோருமே சிறியவர்கள்).


அப்படியே சென்னையில் உள்ள சித்தி, மாமாக்களை பார்த்து விட்டு...(மணி இரண்டாகி விட்டது)..கிளம்பினோம்.

"என்னங்க..டாக்ஸிதான் ஒருநாளைக்கு இருக்கே...மணி ரெண்டுதான் ஆறது...அப்படியே கடைக்கு போய்ட்டு போலாமா.." - அம்மணி
"எந்த கடைக்கு போகணும்....அதான்...நான் வரதுக்குள்ள(from US) போக வேண்டிய கடைக்குலாம் போய்ட்டு வந்த்துக்கோன்னு சொன்னேனே.." - நான்
"இல்ல...இன்னும் ரெண்டு கடைக்கு மட்டும் போகலை..அதான்.." - அம்மணி
"எந்த ரெண்டு கடை" - நான்
"குழந்தைக்கு பிறந்த நாளுக்கு ஏதாவது வாங்கலாம்...அப்படியே எனக்கும்..." - அம்மணி
"பாக்கலாம்...எந்த கடைனு சொல்லு.."-நான்
"நகை கடைக்கும்...டிரஸ் கடைக்கும்.."-அம்மணி..(இப்போது டிரைவர் நமுட்டு சிரிப்பு)

என்க்கு காலுக்கு கீழ் பூமி நழுவியது...பகவானே என்னை காப்பாத்து. சட்டென்று நியாபகம் வந்தது..சென்னையின் பழைய நண்பர்களுடன் போனில் பேசதான் முடிநதது..(மழை & Consulate appointment).நேரில் பார்க்கவில்லை. விசா வேலைக்கு அடுத்தநாள் ஊருக்கு(திருநெல்வேலி) வேறு ட்ரெயினில் டிக்கட் முன்கூட்டியே பண்ணி வெச்சாச்சு. அதனால் விசாவேலை முடிந்த அன்று சாயந்திரம் தாம்பரம் வர சொல்லி இருந்தேன்.

இங்க பாரு..மணி இப்பவே ரெண்டை தாண்டியாச்சு. தாம்பரம் போய்ச்சேர எப்படியும் 3க்கு மேல ஆயிரும். 5 மணி போல ப்ரெண்ஸை வரச்சொல்லியிருக்கேன். இப்ப கிளம்பினாதான் ச்ரியா இருக்கும். குழந்தை வேற காலம்பரலேர்ந்து ரெஸ்ட் இல்லாம இருக்கு.இன்னும் நாளைக்கு வேற 12மணி நேரம் ட்ரெயின்ல வேற போணும். ஸோ இன்னிக்கு இனிமே கஷ்டம்..ட்ராபிக் கூடறதுக்கு முன்னாடி போய் சேர்ற வழிய பாக்கலாம். நாளைக்கு வேணா உங்க மன்னிய காலம்பரயே கூட்டிண்டு போய் என்ன வேணும்னாலும் வாங்கிக்கோ.
அம்மணிகிட்ட நோ ரியாக்ஷன் ...வண்டி தாம்பரம் நோக்கி சென்றது. நண்பர்கள் சொன்னபடி வந்தார்கள். பேசிவிட்டு விடை பெறும்போது ந்ள்ளிரவை தாண்டி விட்டது.

மறுநாள் அம்மணிக்கு போக முடியலை.. ஊருக்கு கெளம்ப வேண்டியிருந்ததால்...பேக்கிங்கிற்கு (already existing பட்டு புடவை & நகை) மட்டுமே நேரம் சரியாக இருந்தது. கிளம்பி ட்ரெயினை பிடித்து உட்கார்ந்தாச்சு. First Class 2 tier sleeper..(2 வேறு முகங்கள்) சரி குழந்தை நைட் அழுததுனா அவங்களுக்கு வேற trouble-ஆ இருக்குமேன்னு யோசிச்சேன். T.T யிடம் போய் கூபே இருக்குமா ஸார்..குழந்தை வேற இருக்கறதுனால...ப்ரைவஸியா இருந்தா வசதியா இருக்கும்னு சொன்னேன். அந்த 2வது கூபேல இருக்கறவங்க Railway Staff தான்...திண்டிவனத்துல எறங்கிருவாங்க...அப்ப மாறிக்கோங்கனு சொன்னார். திண்டிவனத்தில் மாறினோம். ஒரு 5நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது. திறந்தேன்...T.T என்னசார் மாறிட்டீங்களா...OKயா...என்று சொறிந்தார்...சொறிக்கு ம்ருந்து குடுத்துவிட்டு...சாப்டு விட்டு கண்ணயர்ந்தேன். முழித்த பொழுது...மணியாச்சி ஸ்டேஷன். திருநெல்வேலிக்கு இன்னும் ஒரு ஸ்டேஷன் தான் பாக்கி. மனைவியிடம் சொல்லி திருநெல்வேலியில் இறங்குவதற்கு ஆயத்தமானோம்.

6 Comments:

Blogger Dubukku said...

"நகை கடைக்கும்...டிரஸ் கடைக்கும்"

அங்க தானே டேஞ்சரே இருக்கு
:)))

Thursday, March 30, 2006  
Blogger Paavai said...

sorikku marundu evalavu? hope not as much as nagai kadai and pudava kadai potential bills :)-

Tuesday, April 04, 2006  
Blogger இலவசக்கொத்தனார் said...

இராம், டுபுக்கு பதிவில் உங்களுக்கு நான் எழுதிய பின்னூட்டம்.

//தல...பின்னரீங்க. ஆனா கல்லிடைய பத்திதான் பின் விளைவு தெரியாம சொல்லிட்டீங்க...உடம்ப பாத்துக்கோங்க...//

அதாருப்பா இராமச்சந்திரன்? நம்ம ஊருதானா? என்ன இருந்தாலும் இவரு நம்ம ஊரு மாப்பிள்ளை. அதனால உயிர் இருக்கட்டும். எடுத்துடதீங்க. பாத்து அடிங்க. என்ன.

அப்படியே நம்ம பதிவுக்கும் வாங்க. நம்ம ஊர் மனுசா வரலைன்னா எப்படி?

Tuesday, April 04, 2006  
Blogger இலவசக்கொத்தனார் said...

இராம்,

நல்லா எழுதறீங்க. தாமிரபரணி தண்ணின்னா சும்மாவா? என்ன அதிகம் பேரு படிக்கணும்.அதுக்காக தமிழ்மணத்தில் சேரணும். பின்னூட்டம் வாங்கறது ஒரு கலை.
அதெல்லாம் உங்க குரு சொல்லித்தரலையா? :)

Tuesday, April 04, 2006  
Blogger இராமச்சந்திரன் said...

@dubukku - எப்படியோ...இரண்டிலிருந்தும் தப்பிச்சேன். தலைக்கு வந்தது பாகையுடன் மட்டும் போச்சு. (குரு...எல்லாத்துலயும் உங்க முதல் கமென்ட்ட பதிச்சு...இந்த சிஷ்யன் கட்டைவிரலை கேட்காம...கட்டைவிரலை(மட்டும்) காண்பித்து உற்சாகப்படுத்துங்க..நன்றி).

@paavai - சொறிக்கு மருந்து 2 சைபால் விலை தான் (Rs.50)

@இலவசகொத்தனார் - வணக்கம் மண்ணின் மைந்தரே. தங்களின் வருகைக்கு கோடானு கோடி நன்றி. என்னதான் நான் திருநெல்வேலியில் பிறந்து, பாளையில் படித்து வளர்ந்தாலும் தாய் வழி மூதாதையர்களுக்கு கல்லிடை என்பதால் எனக்கும் ஒரு ஊர் பிணைப்பு உண்டு. உங்கள் பதிவை படித்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை கமென்ட் ஏதும் விடவில்லை...இனி செய்கிறேன்.

ஒரு சின்ன வருத்தம்..கிட்டதட்ட 12 லட்சம் இந்திய தொகை செலவு செய்து ஊரில் வீடு கட்டிய பின் தாங்கள் அறிமுகமாகி இருக்கிறீர்கள்.

Wednesday, April 05, 2006  
Blogger [ 'b u s p a s s' ] said...

// என்க்கு காலுக்கு கீழ் பூமி நழுவியது //

உங்க இதெல்லாம் வீட்டம்மா படிக்கிறாங்களா என்ன ?

// சொறிக்கு ம்ருந்து குடுத்துவிட்டு //

:)

Thursday, April 20, 2006  

Post a Comment

<< Home