Thursday, May 04, 2006

பட்ட கையிலே படும்...(புது மொழி..?)

கல்யாணம் பண்ணிப்பார்....(இது மணமக்களோட பெற்றோருக்கா இல்லை மணமக்களுக்கா?)வீட்டை கட்டிப்பார் என்பதுடன் வேறு வீடு மாறிப்பார் என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம் போல.

சற்றேரக்குறைய 5 வருடம் ஒரே அபார்ட்மென்ட்டில் இருந்தேன். குடிவரும் போது பேச்சிலர். பின் ஆறு மாதத்தில் திருமணம். பின் 2½ வருடம் கழித்து குழந்தை...இப்போது குழந்தைக்கு 1¾ வயது. இந்த 5 வருடத்தில் வீட்டில் Marital Status-க்கு ஏற்ப சாமான்களின் பெருக்கம். இடம் பத்தாது போல் தோன்றவே சற்று பெரிய அபார்ட்மென்ட் பார்த்து போகலாம் என தீர்மானித்து, ஒரு 3 வாரங்கள் அலைந்து ஒரு அபார்ட்மென்ட்டை பார்த்து அடவான்ஸ் குடுத்து விட்டு சென்ற வாரம் சனி அன்று ஒரு 17அடி ட்ரக்கை வாடகைக்கு எடுத்து ஆறேழு நண்பர்கள் உதவியுடன் மாறுதல் இனிதே முடிவடைந்தது.

அப்பப்பா... எத்தனை குப்பை சாமான்கள். நிறைய உபயோகபடுத்தி தற்போது உபயோகத்தில் இல்லாத பாத்திரங்கள், பிளாஸ்டிக் கன்டெய்னர்கள்...அனைத்து பிராண்ட் க்ளீனிங் ஐட்டங்கள்...மாயிஸ்ச்சரைஸிங் க்ரீம்கள்..

"இதெல்லாம் நீ இப்போதைக்கு உபயோகப்படுத்தி நான் பார்த்ததே இல்லை... தூக்கி குப்பைல போடேன். வெட்டியா இடத்தை அடைச்சுண்டிருக்கு.." - அம்மணியிடம் சொன்னேன்.

"சரி...அப்ப கொஞ்ச மாசமா உபயோகத்தில இல்லாததலாம்...தூர போட்ருவா ?" - அம்மணி.

பேச்சில் பொடி இருப்பதை சற்று உணர்ந்தேன். இல்ல, தூர போட வேண்டாம் அப்படி ஓரமா வெச்சு வை...பார்த்துட்டு போடலாம். சொல்லி விட்டு ட்ரக் லோடிங்-கை தொடர்ந்தேன்...ஃபுல் ஆனதும்...புது அபார்ட்மென்ட்டில் (நான் மற்றும் நண்பர்கள் மட்டும் சென்று) இறக்கி விட்டு...ஃபைனல் சில்லறை க்ளீயரிங்க்குக்காக...வந்தேன்.

"அந்த மூலைல நீஙக சொன்னமாதிரி கொஞ்ச மாசமா யூஸ் பண்ணாததெல்லாம் வெச்சிருக்கேன்..பாத்து கழிச்சு கட்டுங்கோ"

நான் முதலில் சொன்ன item-கள் போக..புது கம்ப்யூட்டர் புக்ஸ், சில என் டி-ஷர்ட்டுகள், டிஜிடல் கேமரா, வீடியோ கேமரா..." அதற்கு மேல் பார்க்க பொறுக்காமல்...

"இங்க வா என்ன இதெல்லாம்..வெச்சிருக்க..." - நான்

"ஆமா...புக்ஸ் வாங்கினதோட சரி...அதுல இன்டெக்ஸ் பேஜ் கூட நீங்க பாக்கலை..." ஒரு 7 மாசமா யூஸ் பண்ணாம இருக்கு,"

"சரி கேமராலாம் இங்க ஏன் வந்திருக்கு ?"

"ஊர்ல வெச்சு கொஞ்சம் படம் காமிச்சதோட சரி..ஒரு அஞ்சு மாசமா யூஸ் பண்ணாமதான் இருக்கு ?"

நான் சொன்னது என்னிடமே பூமராங் போல திரும்பி வந்தது. என்ன சொல்ல?.. சரி சரி எல்லாத்தையும் எடுத்துண்டு கெளம்பு..ஒண்ணும் தூர போட வேண்டாம். நிறைய வேலை இருக்கு...இதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்...தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தேன்.

சில்லறை பொருள்களுக்காகவே காரில் மேலும் இரண்டு shifting முடிந்தது.

இன்னிக்குள்ள ஓரளவு arrange பண்ணிருவோம். நாளைக்கு கிரிக்கெட் மேட்ச் இருக்கு. 14 member லிஸ்ட்ல இருந்த்தா போகணும்..

இப்பதான கை சரியாகியிருக்கு...உடனே போணுமா ?

ஆபிஸ் ட்ரெய்னிங்னால டீம்ல ரெண்டு மூனு பேர் வரலை...ஸோ...மே பி 14 லிஸ்ட்ல என்ன செலக்ட் பண்ணினா போகணும்.


ஒன்றும் சொல்லவில்லை..

முதல்ல பெட்ரூம்&பாத்ரூம் item-கள் செட் பண்ணிரலாம். மீதிய அப்பப்ப கேப்ல arrange பண்ணிருலாம்...

பெரிய கிங் சைஸ் பெட்டை செட் பண்ண அதோட பேஸை ரெடி செய்தேன். மேட்ரஸை தூக்கி பேஸ் மேல வைக்கணும். அது என்னை விட அரை அடி உயரம்(ஆறரை அடி). ஒரு வசமான கார்னர் பகுதியை பிடித்து தூக்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினேன். இரைந்து கிடந்த விளையாட்டு toys உருளையில் (என் பெண்ணின் உபயம்) காலை வைக்க...அது உருண்டு மூவ் ஆக...பேலன்ஸ் இழந்தேன்.. மேட்ரஸ் flexible என்பதால்...என் பிடியில் இல்லாத இன்னொரு கார்னர் எதிர் திசையை நோக்கி வளைந்து என்னையும் பிடித்து இழுத்து தள்ளியது. கை விரல்கள் மேட்ரஸுடன் சுவற்றில் உள்ள ஜன்னல் விளிம்பில் மோதி..பிடி நழுவி.. போறாததற்கு... மேட்ரஸ் வேறு எந்த பக்கம் விழலாம் என்று டான்ஸ் ஆடி மீண்டும் வெய்ட்டாக வந்து கையில் சுவற்றுடன் மோதியது.

திக்கி திணறி செட் பண்ணிவிட்டு..வலி + அலுப்புடன் தூங்க சென்றேன்.

அடுத்த நாள் காலை...

"என்னங்க விளையாட போலையா ?"

"இல்ல...14 லிஸ்ட் தேறிருச்சாம்...(சமாளித்தேன்)"

"சரி...குழந்தைய பாத்துக்கோங்கோ..இந்த ஃப்ரூட் ஸ்மாஷை குடுங்கோ..நான் பல் தேய்ச்சுட்டு வந்துடறேன்..."

என்ன சொல்லி என்னைச் சொல்ல....

பட்ட கையிலே படும்..

6 Comments:

Blogger Gopalan Ramasubbu said...

ohh God! ungalaku neram sari ileyo?

Saturday, May 06, 2006  
Blogger ambi said...

achooo! pavame! intha kai valiyila kooda blog ellam adichu irukeenga parunga! anga thaan neenga namma oru karaanu prooved... :)

take care..

Thursday, May 11, 2006  
Blogger daydreamer said...

kai paravaailliyaa ippo. soru thinna mudiyudha... adhu thaan thalayaaya prechanai... velai blog ellam appram thaaan...

Friday, May 12, 2006  
Blogger Paavai said...

veetla sonna kettukanum :)-

Saturday, May 13, 2006  
Anonymous Anonymous said...

hahah indha kuppai matterla mattum correcta veetula madakirangaiya

seri seri adutha post podunga timeout

Wednesday, May 24, 2006  
Blogger இராமச்சந்திரன் said...

@Gopalan Ramasubbu => என்ன சார் செய்ய....ஜோஸியர்கிட்ட போய் ரொம்ப நாளாச்சு....ஜாதகத்தை காமிக்கணும்

@ambi => அதான் சார் திருநெல்வேலி. தலைல இடியே விழுந்தாலும் தைரியமா கருகின மூஞ்சியோட பொண்ணு பாக்க போய்ருவோம்ல....

@daydreamer => ஏதோ இப்ப பரவாயில்லீங்க. சோறு துன்ன முடியுது (இல்லாட்டாலும் ஊட்டி விட ரெண்டு பேர் இருக்காங்க இல்ல... அதாங்க அம்மாவும் கட்டின மனைவியும்)..

@Paavai => ஏதோ வீ. சேகர் படத்தோட டைட்டில் மாதிரி இருக்கே ?

@dubukku => ஆமாங்க குரு. இந்த குப்பை மேட்டர்தான்...அப்பப்ப தடுக்கி விடும். அப்பலாம் ஒரு வட்டாரச்சொல் ஞாபகம் வரும்.. "பூனை மெலிஞ்சா எலி டேட்டிங் கூப்பிடுமாம்".

சீக்கிரம் அடுத்த போஸ்டிங் போட்டுடரேன் ... குரு சொல்லை தட்டின பாவம் எனக்கு வேண்டாம்.

Wednesday, May 31, 2006  

Post a Comment

<< Home