Friday, April 07, 2006

காற்றினிலே வார்த்தைகளால்

வெள்ளி என்றாலே வெள்ளைக்காரர்களுக்கு உற்சாகம் தான், சனி & ஞாயிறு விடுமுறை என்பதால்.

என் ஆபிஸுக்கும் வீட்டுக்கும் 12 நிமிடம்தான் காரில் செல்ல ஆகும் என்பதால் நான் லஞ்சிற்க்கு 99.99% வீட்டுக்குதான் போவேன். Infact நான் பார்க்கிங் பகுதிக்கு நடக்கும் நேரத்தை விட அங்கிருந்து வீட்டுக்கு காரில் செல்லும் நேரம் குறைவு.

இன்று அப்படி போய்க்கொண்டிருந்த போது வழியில் ஒரு கார் இடது இன்ட்டிகேட்டரை ஆஃப் செய்யாமல் பின்னால் வருபவர்களை குழப்பும் விதமாக நேராக சென்று கொண்டிருந்த்து. அந்நியன் படம் வேறு ஏற்கனவே ரசித்து பார்த்திருந்ததால் சின்ன அலட்சியம் மெகா அலட்சியமாகி விடக்கூடாதென்பதற்காக, சரி இதை அவளிடம் சொல்லலாம் என் நினைத்து என் காரை கொஞ்சம் விரட்டி இணையான வலது பக்க லேனில் சென்று நம்ம ஊர் பாணியில் கை விரல்களை குவித்து விரித்து காண்பித்து இன்டிகேட் பண்ணினேன். அது புரியாமல் அந்த வெள்ளைக்காரி (ஒரு 25 வயசு இருக்கும்) திருப்பி என்னவென கேட்டாள். "உன் கார் இன்ட்டிகேட்டர் அணைக்கவில்லை" என்பதை (கார் & காற்று சத்தத்தில் பேசினால் கேட்காது) விரலால் அவளை(காரை) சுட்டிக்காட்டி மீண்டும் அதே சமிக்ஞை செய்தேன். வந்தது வினை. அதை அவள் அனர்த்தமாக புரிந்து கொண்டு எனக்கு நடு விரலை காண்பித்தாள். எனக்கா மகா டென்ஷன் ஆகி விட்டது. உடனே என் கட்டைவிரலை (மட்டும்) உயர்த்தி காண்பித்தேன் (டீல்). அவள் முகம் இப்போது சுருங்கி விட்டது. சரியாக என் வீட்டு திருப்பம் (சின்ன ரோடு) வந்தது. நான் திரும்பி என் வீட்டை நோக்கி சென்று காரை நிப்பாட்டி விட்டு இறங்கவும் அவளும் என் பின்னால் வந்து காரை ஆஃப் செய்யாமல் பார்க் மட்டும் பண்ணி என்னிடம் வந்து சற்று கோபத்துடன் கேட்டாள். பொறுமையாக அவளுக்கு விளக்கினேன். பின் புரிந்தவளாய் அவள் செயலுக்கு மன்னிப்பு கேட்டாள். நானும் அதெல்லாம் தப்பாக நினைக்கவில்லை என சொன்னேன். நான் அந்த ஏரியாவில் தான் இருக்கிறேனா என்றும் கேட்டாள். பின் நன்றி சொல்லி விட்டு (இன்ட்டிகேட்டரை ஆஃப் செய்து) வண்டியில் கிளம்பி போனாள்.

ஏரியாவை வேறு கேட்டுவிட்டு போயிருக்கிறாள். இனிமேல் தான் தெரியும் வீட்டுக்கு ஆட்டோ வருமா அல்லது லிமோஸின் வருமா என்று....

5 Comments:

Blogger ambi said...

Ahaaa, intha funda ellam unga veetu thangamanikku theriyumaa?
deal! nu indication verayaa? nadakattum thalaiva, (namba t'veli karaa rombave kusumbu pidichavaa)

Saturday, April 08, 2006  
Blogger ambi said...

btw, unga nadai merugeritte poguthu.. konjam blog promotion pannugoo, innum neraya hit venum illaiyaa?
for further guidence visit my prev post:
http://ammanchi.blogspot.com/2006/03/blog-visitors-promotion-techniques.html

Monday, April 10, 2006  
Blogger Gopalan Ramasubbu said...

Hi,

லிமோஸின்தான் வரும்னு நினைக்கிறேன்.You've got good flow in writing இராமச்சந்திரன்.என்னுடைய பூர்வீகம் திருநெல்வேலி தான்.:)First time here.

Monday, April 10, 2006  
Anonymous Anonymous said...

Veetukku therinja poori kattai varum :)

Ambi - un (blog promotion) rowsu thaangalada..

Tuesday, April 11, 2006  
Blogger இராமச்சந்திரன் said...

@ambi => வாங்க சார்...comment-க்கு thanks. உங்க ப்ளாக் ப்ரோமோஷன் மெதட்லாம் படிச்சேன்...அதுல இப்படி வந்து comment விடறது ஒன்னுன்னும் தெரியும்.

@gopalan ramasubbu => வணக்கம் நெல்லைக்காரரே. First time here-னு போட்டு இருக்கீங்க...Thanks & Welcome. நானும் நீங்களும் நெனச்சமாதிரி லிமோஸின் என்ன...ஒரு ஓட்டை சைக்கிள் கூட வரலை...ஹூம்...

@dubukku => நெறைய பூரி (கட்டை) வாங்கியிருப்பீங்க போல இருக்கு. நம்ம வூட்ல மேட்டரு தெரியாது..தெரிஞ்சாலும்...பூரி கட்டை வராது...ஏன் தெரியுமா...அத விட வெயிட்டான Item லாம் இருக்கு...ஹீ...ஹீ

Wednesday, April 12, 2006  

Post a Comment

<< Home