Thursday, March 02, 2006

இந்திய விஜயம் - 2

தாம்பரத்தில் இவர்கள் வீடு உள்ளடிங்கிய ஏரியாவில் இருந்தது. பஸ் / ட்ரெய்ன் எது பிடிக்கணும்னாலும் ஆட்டோலதான் போகணும். ஏன் ஒரு ஆட்டோ பிடிக்கவே இன்னொரு ஆட்டோ பிடிச்சுதான் போகணும். சரியான மழை வேற. ஏரியால இருந்த தண்ணிக்கு ஆட்டோ கூட வர மறுத்தார்கள். ஒரே வழி டூ வீலர்தான். அதுக்கும் ஒரு கஷ்டம் இருந்த்து.மழை மூடிய ரோடின் அந்தரங்கங்களை நன்றாக தெரிந்தவர்கள்தான் போக முடியும். இல்லைனா...நிறைய ஆறடி நிலம் சொந்தமாக வாய்ப்பு.

வெளியில் எங்கும் செல்லவில்லை. இரண்டு நாளில் யூ.எஸ் கான்ஸுலேட் அப்பாயின்ட்மென்ட் வேறு.அதுக்குள்ள மழை நிற்பேனா பார் என மிரட்டியது. என் கஸினிடம் (Note : கஸின், Not அஸின்) சொல்லி விசாக்குரிய D.D எடுத்து வைக்க சொல்லியிருந்ததால்...அந்த வேலை மிச்சம். ஒருவாறாக மழை நின்றது. டாக்ஸி அமர்த்தி (ஒரு நாள் வாடகைக்கு) நான், மனைவி & மகள் ...கிளம்பினோம். நிறையவே முன்ன்னாடி கிளம்பியும் கரெக்ட் டைமுக்குதான் போக முடிந்தது. அப்பாயின்மென்ட் லெட்டர் & பாஸ்போர்ட் பார்த்தார்கள். ஒரு குண்டை தூக்கி போட்டார்கள்.

அப்பாயின்ட்மென்ட் உங்களுக்கும், உங்க வைஃபுக்கும்தான்...(உண்மையும் அதுதான்)...அதுனால உங்க குழந்தைய உள்ள கூட்டிட்டு போக முடியாது. (ஆக்சுவலா இது நண்பண் குடுத்த ஐடியா...குழந்தைய கூட்டிட்டு போனா...க்யூல நிக்க வேண்டாம்...வேலை சீக்கிரம் முடியும்னு சொன்னான்)..
சரி இப்ப என்ன பண்ணலாம்னு மண்டைய உடைச்ச போது அந்த ஐடியா வொர்க்வுட் ஆச்சு. ஸார் என் குழந்தை அமெரிக்கா-ல தான் பொறந்ததது. அமெரிக்கன் சிடிசன் தான். - அதுனால உள்ள போக ஸ்பெஷல் அப்பாயின்ட்மென்ட் தேவை இல்லைனு சொன்னேன்.


அவன் உள்ளார போயி யார்கிட்டயோ டிஸ்கஸ் பண்ணிவிட்டு வந்தான். என்னிடம் .."குழந்தையோட அமெரிக்கா பாஸ்போர்ட் இருக்கானு கேட்டான் (என்னிடம் ஒரு வழக்கம் உண்டு. பாஸ்போர்ட் விசா சம்பந்தமா போனா தேவையிருக்கோ இல்லியோ ஃபேமிலி யோட மொத்த பாஸ்போர்ட்டும் ஒன்னுபோல வெச்சிருப்பேன்). காண்பித்தேன்...அப்பாடா...உள்ளே விட்டார்கள். உண்மையிலேயே குழந்தை இருந்ததால் ஸ்பெஷலாக (No..Queue)கவனித்தார்கள் நண்பணுக்கு ஜே..சொன்னேன். கடைசியில் க்ளைமேக்ஸ்..விசா தீர்மானிக்கும் கவுன்ட்டர் (ஜாதி இல்ல...கூண்டு). டாகுமென்ட் கேட்டர்கள். ஒவ்வொன்றாக கொடுத்துக்கொண்டு வந்தேன். கடைசியில் I-129 இருக்கா என்று கேட்டார்கள். அது என்னிடம் இல்லை. அது என்ன எழவுன்னும் அப்ப டென்ஷனில் தெரியவில்லை. அப்புறம் குடைய ஆரம்பித்தார்கள்.

எத்தனை வருஷமா அமெரிக்கால இருக்க..?
7 வருஷமா..இருக்கேன்...(நான்)

இந்த அட்ரஸ்-ல (தற்போதைய அமெரிக்க முகவரி) எத்தன வருஷமா இருக்க..?
கிட்டதட்ட அஞ்சு வருஷமா...

உன் Wife...வேலை பாக்கிறாளா ?
இல்ல... House Wife தான்...

உன் Wifeஎங்க ?
(அப்பதான் கவனித்தேன்.. குழந்தை அழுகிறதென்று சற்று ஓரமாக நின்று சமாதானபடுத்திக்கொண்டிருந்தாள்...விசா கேள்வி டென்ஷனில் நான் கவனிக்கலை)..அவளை வ்ருமாறு சைகை செய்தேன்..(குழந்தையுடன்) வந்தாள்..

குழந்தை ...உங்க குழந்தையா ?


ஆமாம்.



குழ்ந்தைக்கு விசா அப்ளிகேஷன் இல்லியே ?


அவ...அமெரிக்கன் சிடிசன் (பாஸ்போர்ட் காண்பித்தேன்).



ஓ...ஷீ இஸ் வெரி க்யூட்...


தேங்க்ஸ்...


மேற்கொண்டு கேள்வி ஏதும் இல்லை....We have approved Your Visa..You will receive your stamped passport within a week thru the courier at the local address you've mentioned in the application form.

தேங்க்யூ...

குழந்தைக்கு...பெரிய...உம்மா கொடுத்து விட்டு ...கான்ஸுலேட்டை விட்டு கிளம்பினேன்.

7 Comments:

Blogger Dubukku said...

விசா ரெனியுவலா?? குழந்தை இருந்தா க்யூல நிக்கவேண்டாம்ங்கிறது ஏர்போர்டிலும் ஜாலி இல்ல? முதன் முதலில் இறங்கியபோது இந்த அனுபவம் ரொம்பவே நன்றாக இருந்தது. :)

Wednesday, March 08, 2006  
Blogger daydreamer said...

indha lollellam venaamnu thaan naan america ve pogala.. (che che indha pazham pulikkum statement ellam illa). Aana idha ippo therinjukittadhaala (kaila oru kuzhandai (sondha kuzhandai) irunda queue vellam skip pannalaamnu) yaarkanum solla vasadhiya irukkum. nalla ezhudareenga.

Thursday, March 16, 2006  
Blogger ambi said...

Hi first time here,

what a humerous touch! kallidai yaa? athaan, antha man vasanai (kusumbu)irukku!(he,hee dubukku thambi naan)..

oru thaba namma Aathuku (blog) vaangoo!

Friday, March 17, 2006  
Blogger இராமச்சந்திரன் said...

daydreamer => ரொம்ப நன்றிங்க... நான் U.S.A வந்தது விபத்துதான். லட்சிய கனவெல்லாம் இல்லை. என்னோட இந்த ப்ளாகுக்கு காரணம் மிஸ்டர் டுபுக்கு தான். பயங்கரமா ஊக்கப்படுத்தி எழுத சொன்னார். இது ஓரளவு நல்லாயிருக்குன்னு நீங்க நினைச்சா அதன் முழுப்பெருமை டுபுக்குவைதான் சாரும். ..மீண்டும் மிக்க நன்றி.

Tuesday, March 21, 2006  
Blogger இராமச்சந்திரன் said...

ambi => நான் பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் (வேலை மட்டும் தான் வெளியூர்) பாளையங்கோட்டை. என் தாத்தாவுக்கு(அம்மாவோட அப்பா) சொந்த ஊர் கல்லிடை (certificate-ல அவர் கல்லிடைய இனிஷியலா வெச்சிருந்தார்). இன்னும் அங்க சொந்தங்கள் இருக்கா.

உங்க ஆத்துக்கு வரது (ப்ளாக்) இருக்கட்டும். இந்த இந்தியா ட்ரிப்ல உங்க உண்மையான ஆத்துக்கு (அம்பை) வர ப்ளான் லாம் போட்டு கடைசில முடியாம போச்சு. குழந்தைக்கு உடம்புக்கு படுத்தி 90% ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் தான் அலைய டைம் இருந்தது. கண்டிப்பா உங்க ப்ளாக்குக்கு வரேன்...

Tuesday, March 21, 2006  
Blogger Paavai said...

auto pidikkave innoru autoladhan poganum .. lol..

kuzhandai matrum, vayasanvanga, people with special needs, evangalukku ellam life is a lot easier in these places..

Monday, March 27, 2006  
Blogger [ 'b u s p a s s' ] said...

// ஒரு ஆட்டோ பிடிக்கவே இன்னொரு ஆட்டோ பிடிச்சுதான் போகணும் //

nalla ezhuthureenga.

cheers.

Thursday, April 20, 2006  

Post a Comment

<< Home