Wednesday, April 05, 2006

இந்திய விஜயம் - 4

திருநெல்வேலி வந்தாச்சு...பக்கத்து கம்பார்ட்மென்ட்டிலிருந்து சத்தம் கேட்டது. சுமைகள் ஜாஸ்தி என்பதால் எல்லாவற்றையும் compartment வாசல் பக்கம் கொண்டு வைத்தாகி விட்டது.

எனக்கு பொதுவாகவே நண்பர் குழாம் அதிகம். அதிலும் சொந்த ஊரில் என்றால் கேட்கவா வேண்டும். ஒரு "தேவர் மகனுக்கே" (சினிமா) அந்த வ்ரவேற்பு இருக்கும் போது, தேவர், ஐயர், கோனார் போன்ற சகல பிரிவுகளிலும் நண்பர்கள் உள்ள எனக்கு எப்படி வரவேற்பு இருந்திருக்கணும்... என்னத்த சொல்ல. நான் என்று வருகிறேன் என்று பல முறை போனில் பேசிய போது உறுதி செய்து கொண்ட நண்பர்கள் எல்லாரும் அன்று எஸ்கேப் (பொட்டி தூக்க தயாராக இல்லை போலும்).

ட்ராலி அமர்த்தி பொட்டிகளை ஏற்றினேன். மனைவிக்கு பரம சந்தோஷம் (ப்ரென்ட்ஸை பற்றி அவ்ளோ பில்ட் அப் குடுத்திருந்தேன்). என் சகலை (கோ-பிரதர்) ஒரு வேன் அமர்த்தி வந்திருந்தார். ஒருவாராக எல்லாவற்றையும் வேனில் ஏற்றி ஸ்டேஷனிலிருந்து வீடு நோக்கி வேன் விரைந்த்தது.

திருநெல்வேலி ஊரை பொருத்தமட்டில் பெரிதாக மாற்றம் இல்லை. மக்களில் நிறைய மாற்றம். நிறைய காதுகளில் செல். நிறைய பேர் ஏதாவது வேலையில் இருந்தார்கள். ஒரு மூவாயிரமாவது குறைந்தபட்சமாக சம்பாதிக்கிறார்கள். நிறைய பேர் டூ வீலர் வைத்து இருந்தார்கள் (ஸ்கூல் படிக்கும் போது ஒரு சைக்கிளுக்காக நிறைய உண்ணாவிரதம் இருந்து..பின் அப்பாவின் தயவால் கிடைத்தது..... முதுகில்). நிறைய கார்களும் கூட. ட்ராபிக் சென்ஸ் இன்னும் அதே ஒழுங்கில். எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கையில் வீடும் வந்தது.

அங்கும் எல்லோரும் குழந்தையை இப்போது தான் முதன் முதலாக பார்ப்பதால் என்னை இரண்டாம் பட்சம் ஆக்கி விட்டார்கள். அளவளாவி விட்டு பின் குளித்து ப்ரஷ் ஆனேன். நண்பர்களுக்கு போன் செய்தேன். "என்ன மக்கா ...பத்திரமா வண்ட்டியா..(வந்துட்டியா). ஸாரில...காலேல அவசரமா போக வேண்டி வந்திருச்சு (எங்க?)...ச்சாயந்திரம் வாரேன்...வீட்லயே இருல....தனியா போய்ராத...இன்னா" (பாருக்கு).

ஒரு ஆறு மணிபோல எல்லாரும் வந்தார்கள். பொதுவாக குசலம் விசாரித்து விட்டு...நேராக சப்ஜெக்டுக்கு வந்தார்கள். எந்த பார் போகலாம். ஒருத்தன் ஆர்யாஸ் என்றான். இன்னொருவன் நயாகரா என்றான். ஆர்யாஸ் மறுக்கப்பட்டவன் ..நயாகரா பரிந்துரைத்தவனிடம் "ஏம்ல...ஆர்யாஸ் வரமாட்டேங்க...மாமனார் பாத்துருவார்னு பயமா" - என்று கேட்க...இவன் " போல...அவர் இருந்தா எனக்கென்ன...புதுசாவா என்னை பாக்க போறாரு". நயாகரா பஸ்டாண்டு பக்கமா இருக்கு...எங்கய்யா வேற (அப்பா) டிக்கட் புக் பண்ண பஸ்டாண்டுக்கு தான் போயிருக்காரு. அதான் பாத்தேன். ஆர்யாஸ் கொஞ்சம் தள்ளி இருக்குல்லா...அதான் சொன்னேன்". சரி பேச்சை வளர்க்க வேண்டாமென்று நான் ..சரி ஆர்யாஸ் நம்ம நெறைய போயிருக்கோம். ஒரு சேன்ச்சுக்கு நயாகரா போலாம்.. நானும் போனதில்லைனு சொன்னேன். "அதுக்கு மட்டும் இல்ல மக்கா...நெறய டிஷ் வேற அன் லிமிடேடா தரான் அதுதான் - நயாகரா சஜெஸ்ட் பண்ணியவர்.

நான் நயாகராவை கனடா நாட்டு பகுதியிலிருந்தும் அமெரிக்க பகுதியிலிருந்தும் நிறைய முறை பார்த்திருக்கேன். திருநெலவேலி ஆங்கிள்-ல இப்பதான் பார்க்கப்போறேன். ஆறுபேர் மூன்று வண்டியில் கிளம்பினோம்.

3 Comments:

Blogger Unknown said...

வாங்க தின்னவேலி அய்யா. நல்லாத்தான் எழுதீக. இதே மாதிரி மேல வையுங்க (விளங்கா?). நம்மா ப்ளாக் பக்கமும் வரது mahamosam.blogspot.com

Thursday, April 06, 2006  
Blogger இலவசக்கொத்தனார் said...

வற்றா ஜீவ நதியாம் தாமிரபரணிக் கரையிலே, தொன்மையும் பெருமையும் நிரம்பி இருக்கும் நெல்லை மாநகரிலே, தண்ணிக்கென்ன பஞ்சம்? என்ன அடிச்சீங்க, எப்படி இருந்தது நெல்லை நயாகரான்னு கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க. கொஞ்ச நேரம் இருந்தா கலர் கலரா லைட் எல்லாம் தெரியுமாமே. தெரிஞ்சுதா?

இங்க எல்லாம் போகும்போது வண்டில போகாதீங்கப்பா. ஒரு டாக்ஸி எடுத்துக்கிட்டு போங்க.

Thursday, April 06, 2006  
Blogger Dubukku said...

போஸ்டுக்கு போஸ்ட் நடை மெருகு கூடுது பார்த்தீங்களா...நல்லா எழுதியிருக்கீங்க...வூட்டுல தெரியுமாவே நீங்க பாருக்கு போனது?

Friday, April 07, 2006  

Post a Comment

<< Home