Wednesday, April 19, 2006

நீ கெட்டு நான் கெட்டு கிரிகெட்டு

டுபுக்கு ஸார்...உங்க தலைப்பு கொஞ்சம் பொருந்தி வந்ததுனால யூஸ் பண்ணிகிட்டேன். காப்பிரைட் இஷ்ஸூஸ் பத்தி ஃபீல் பண்ணிணீங்கன்னா... நீஙக வீட்டுக்கு வரும்போது "ராயல் டீ" தரேன் (நல்ல ஏலக்காய் & இஞ்சி போட்டு).

இந்த பதிவு அக்ரஹாரத்து கிரிக்கெட்டினால் இல்லை...ஆங்காரத்து கிரிக்கெட்டினால்.

இங்கு மிஷிகனில் எங்ளுக்கு கிரிக்கெட் டீம் உள்ளது. சென்ற வருடம் தான் அதை முறைப்படுத்தி பதிவு செய்தோம். City of Pontiac மேயர் ஒரு பார்க் க்ரவுண்டை எங்களுக்கு தானமாக தந்துள்ளார். அதில் காங்க்ரீட் போட்டு மேலே Asro Turf போட்டு போன வருட கோடை முடிவில் ரெடி செய்தோம். பின் குளிர் ஆரம்பித்து விட்டதால் (குளிர் காலத்தில் சாதாரணமாக மைனஸ் 17 டிகிரி செல்ஸியஸ்லாம் இருக்கும்) கிரவுண்ட் பக்கம் போகவில்லை. வின்ட்டரில் ஒரு இன்டோர் டோர்னமென்ட் ஆடி (டீம் பார்ம் பண்ணி முதல் டோர்னமென்ட்) செமி ஃபைனல் வரை சென்றோம்.

இப்போ ஸம்மர் ஆரம்பித்து விட்டதால் ஓப்பன் டோர்னமென்ட் அடுத்த மாதம் உள்ளது. மனைவியின் எச்சரிக்கை (வயசாச்சு...இதெல்லாம் வேண்டாம்)யையும் மீறி ரெகுலர் ப்ராக்டீஸ்-க்கு போய்க்கொண்டிருந்தேன். நேற்று அப்படி விளையாடிக் கொண்டிருந்தோம்.

நான் எல்லாவற்றிலும் ஆவரேஜ் தான். ரெகுலர் விக்கெட் கீப்பர் பாட்டிங் பிராக்டீஸ் செய்யும் போது தற்காலிகமாக என்னை கீப் பண்ண சொன்னார்கள். நானும் நன்றாக தான் பண்ணிக்கொண்டிருந்தேன். எங்க டீமில் ஒரு வடக்கத்தி பெளலர் இருக்கான். கொஞ்சம் முன் கோபம் ஜாஸ்தி. முதல் பந்தை சற்று லெக் சைடில் ஓவர் பிட்சாக போட்டதில் பந்து பெளன்டரிக்கு பறந்தது. எல்லோரும் ஒரே டீம், ரொம்ப நாள் பழக்கம் என்பதால் அடித்த பேட்ஸ்மேன் அவனிடம் "You should not bowl down the leg side..that too over pitched" என்று அட்வைஸ் வேறு செய்தார். நம்மாளுக்கு அதில் கொஞ்சம் ஆங்காரம் வந்து விட்டது போல. அடுத்த பால் நல்ல full shoulder பவரில் ஷார்ட் பிட்ச் பெளன்ஸர் போட்டான். பாட்ஸ்மேன் அடிக்க போய் கனெக்ட் பண்ணமுடியாமல் கடைசி செகன்ட்டில் விலக...அடுத்த சில மைக்ரோ வினாடிகளில், பால் என் முகத்தின் சமீபத்தில். சட்டென்று சுதாரித்து கைகளால் முழுவதுமாக கேதர் செய்வதற்கு முன்னால் கைகளை மூடி விட்டேன். என் வலது கை மோதிர விரலின் நுனியில் பட்டு ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் விழுந்தது. ப்ராணண் போயே போச்...வீட்டுக்கு வருவதற்குள் விரல் பேல்ஸ் போல ஆகி விட்டது.

இரவு வீட்டில் இட்லி என்பதால் மீதி விரலை வைத்து அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டு விட்டேன். காலை ஆபீஸ் வந்து மானேஜரிடம் விபரம் கூறி (கொஞ்சம் மெதுவாதான் வேலை பாக்க முடியும்...) அவர் பாக்கும் போதெல்லாம் பட்டன் பட்டனாக தட்டினேன் (இல்லாட்டாலும் கட்டிங் & ஒட்டிங் தான் முக்கால் வாசி). மதியம் வழக்கம் போல லஞ்சிற்கு வீட்டுக்கு போனேன். சாதம் பிசைய முடியவில்லை. வேறு வழியில்லாமல் அம்மணியை அழைத்தேன்.

"அதான் எல்லாம் அடுப்பு மேல வெச்சிருக்கேனே...எடுத்து போட்டுக்கோங்கோ..." - உள்ளேயிருந்து குரல்.

"இல்ல இங்க வந்து கொஞ்சம் பிசிஞ்சு குடேன்" - நான்

"ஏன் கை என்னாச்சு..?"

காண்பித்தேன்.

சரியா விளையாட தெரியலைன்னா ஏன் விளையாடனும். அதான் வயசாச்சு வேண்டாம்னு சொல்றேனே...கேட்டாதான... அர்ச்சனை(யுடன்) தட்டை (பிசைந்து) குடுத்தாள். மீதி விரல்களால் எடுத்து சாப்பிட கஷ்டமாக இருந்தது...என் மனைவியை பார்த்தேன்...ஊட்டிலாம் விட முடியாது...வேற வேலை இல்லை என சொல்லி கண்ணிலிருந்து மறைந்தாள் (குழந்தைய பாத்துக்காம என்ன விளையாட்டு வேண்டிக்கிடக்கு, வீட்ல கல்யாணத்துக்கு போட்ட மோதிரம் பத்தி வேற கமென்ட் விட்டேளே(?) அதுக்குதான் பகவானா பாத்து குடுத்திருக்கார்... உள்ளிருந்து அசரீரி கேட்டது). விரல் வீங்கி சற்று உள்நோக்கிய திசையில் பெர்மனென்ட்டாக வளைந்து இருந்ததால்...என் ஒன்னறை வயது பெண் வேறு நான் அவளை கைப்பிடித்து நடத்தி கூட்டி போவதாக நினைத்து விரலைப் பற்றி ரண வலியை..கூட்டியது. சாதாரணமான நம்க்கே இந்த விரல் வலியினால இவ்ளோ பிரச்சினைன்னா... சினிமால விரல்லயே விளையாடும் சிம்புவுக்கு பட்டுதுன்னா ?

இதனால் ப்ளாக்-கிற்கு வருகை தரும் கோடானு கோடி அன்பர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் (ஊர்ல எலெக்ஷன் இல்லா..அதாம்லே இந்த எஃபக்ட்), நீஙக கிரிக்கெட் விளையாடாதீங்கன்னு நான் சொல்லப்போறேன்னு நீங்க நினைச்சா அதுதான் இல்ல. அடுத்த போஸ்ட்டுக்கு கொஞ்ச நாளாகும்னு சொல்ல வந்தேன்...(இல்லாட்டாலும் என்னத்த கிழிச்சன்னு நீங்க சொல்றது...கேக்குது).

ஆபீஸ் வொர்க் மாதிரி கட்டிங் ஒட்ட்டிங்ல ப்ளாக் ஒப்பேத்த முடியாது. எல்லாம் சொந்த சரக்கு...டைப் பண்ணியே ஆகணுங்கிறதுனால...தான் இந்த வேண்டுகோள் (இந்த தலைப்ப கூட டைப்தான் பண்ணிணேனே ஒழிய ...டுபுக்கு போஸ்ட்-லேர்ந்து காப்பி & பேஸ்ட் பண்ணலீங்கோ).

6 Comments:

Blogger Dubukku said...

இந்த தலைப்ப கூட டைப்தான் பண்ணிணேனே ஒழிய ...டுபுக்கு போஸ்ட்-லேர்ந்து காப்பி & பேஸ்ட் பண்ணலீங்கோ

:)))) பார்த்து அப்பூ....நல்லா எழுதியிருக்கீங்க


மாஸ்டர் ஒரு ஸ்பெஷல் ....டீடீ

Wednesday, April 19, 2006  
Blogger ambi said...

நல்ல வேளை, விரல்ல பட்டது, மண்டையில பட்டு இருந்தா அப்புறம் பிளாக் எழுதவே முடியாது!

simbu stuff... sema comedy and true also..
take care...

Friday, April 21, 2006  
Anonymous Anonymous said...

first time your blog from dubukku's...it reminds me of Koundamani-Senthil comedy...forgot the movie name ;-)

Friday, April 21, 2006  
Blogger Paavai said...

Aiyo paavame - wife sonna madiri vayasana kalathla idhellam edhukku - kai viralla adi, valikkum - adikka matteengangra thembudan - inda comment

Friday, April 28, 2006  
Blogger Gopalan Ramasubbu said...

இராமச்சந்திரன் கையால ஒரு வில்லையே ஒடச்சாரு, நீங்க என்னடான?;) just kidding.get well soon.

Thursday, May 04, 2006  
Blogger இராமச்சந்திரன் said...

@ dubukku => குரு, நான் தன்யனானேன்.

நாயர் இவிடெ கிட்டிட்டில்லா.. ஸ்பெஷல் டீக்கு..கொஞ்ச மணிக்கூறு ஆகும்..

@ ambi => விரல்ல அடிபட்ட உடனே..field-ல ரொம்ப நேரமா உதறிண்டிருந்தேன்...அப்போ நண்பன் என்னடா சிம்பு மாதிரி விரலை ஓவரா உதரிண்ட்டிருக்க...அப்படின்னு கேட்டான்...அதைதான் அப்படியே ப்ளாக்ல ஏத்திட்டேன்.

@ sundaresan => ஒருத்தனுக்கு அடிபட்டா அடுத்தவனுக்கு காமெடியாயிருமே...அதான்யா நம்ம ஊரு..

@ paavai => என்னங்க அம்மணிய கோடிட்டு காமிச்சு...சந்தடில நீங்களும் வயசாச்சுனு சொல்றீங்க...38லாம் ஒரு வயசா ?

@ gopalan ramasubbu => வாங்க சார்..இப்ப இருக்கற ராமச்சந்திரன்கள்லாம் கையால ஒரு 5 பைசா வில்லை-ய கூட ஒடைக்க முடியாது. நல்ல வேளை, கை, வில்லை மாதி ஒடையலையேன்னு சந்தோஷப்பட வேண்டியதுதான்.

Wednesday, May 10, 2006  

Post a Comment

<< Home