Tuesday, February 14, 2006

இந்திய விஜயம் - 1

சற்றேரக்குறைய 21 நாட்கள் பிரம்மச்சாரி வாழ்க்கைய அனுபவிச்சுட்டு (மனைவி & மகள் - முதல்லயே அனுப்பிட்டேன்) ஹாய்யா கெளம்பினேன். ஒரு மாதிரி தூங்கி & முழிச்சு 21 ம்ணி நேரம் கடத்தி சென்னை வந்தாச்சு. சொந்தக்கார நண்பர் (Relative but moves like friend) ஏர்போர்ட் உள்ளயே வந்து (அவர் கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர்) என்ன ரிஸீவ் பண்ணீ சடங்குகளை முடிச்சு வெளில வந்த போது நடுராத்திரிய தாண்டியாச்சு. ஒரு தம் அடிக்கலாம்னு பத்த வெச்சா...ஒரு 2 செகன்ட் இருக்கும். ஒரு காவல் துறை அருகில் வந்து ....

ஸார் ...இங்க தம் அடிக்க கூடாது...வார்ன் பண்ணியது.

இல்ல ஸார் கிட்டதட்ட 13 மணி நேரமா அடிக்கலை...அதான்...

கூட கொஞ்ச நேரம் ...அப்படியே இருந்து வீட்ல போய் அடிங்க...

(வீட்ல தான் அடிப்பாங்க...நான் அடிக்க முடியாதுன்னு நெனச்சு) கீழ போட எத்தனிக்கும் போது ...அந்த டீ கடை பக்க மறைவுல வேனா போய் அடிங்க.

அவருக்கு தாங்க்ஸிட்டு....தம் அடிச்சுட்டு...வீட்டுக்கு போய் சேர ஆயத்தமானேன்.

டாக்ஸி புடிச்சு உள்ளார உட்கார்ந்தாச்சு. வண்டி தாம்பரம் போய்க்கொண்டு இருந்தது. என்னப்பா வண்டி புது டைப்பான்னு டிரைவர் கிட்ட கேட்டேன். நக்கல் பண்ணாதீங்க ஸார்...அதான் பாத்துட்டு தான ஏறீனீங்கன்னு சொன்னான். இல்ல ரெண்டு கியர் தான் இருக்கே...அதான் கேட்டேன். 1ம் 3ம் ஸ்லிப் ஸார் அதான் 2லயும் 4லயும் போட்டு ஓட்ரேன்னான். சென்னைல நல்ல மழை வேற (நவம்பர் 2005). ரோடு பூரா மழை தண்ணீ. குலுங்கி குலுங்கி வீடு போய் சேரும் போது கிட்டதட்ட அதிகாலை. வண்டில ஹார்ன் வேற இல்ல. எறங்கி கிரில் கேட்ட தட்டினேன் (மாமனார் & மாமியார் வீடு). உள்ளேர்ந்து குரல் ...அதான் பை வெச்சு இருக்கேனே...பாக்கெட்ட போட்டுட்டு போப்பா...(வீட்டோட எல்லாருக்கு உடம்பு ச்ரி யில்லாததுனால யாரும் ஏர்போர்ட் வரலை..என் சொந்தகார நண்பர் தான் வந்தாப்ல).

...இல்ல நான் ராமசந்திரன் வந்திருக்கேன். ஓ வா...வா...என்ன ஸெளக்கியமா...(என்ன சின்ன வயசுலேர்ந்தே அவங்களுக்கு தெரியும்...ஸோ ...நீ...வா...போ தான்... மாப்பிள்ளை மரியாதைலாம் கெடயாது)..ஆங்....நல்லாஇருக்கேன். ..

கொஞ்ச நேரம் பொதுவான பேச்சில் கரைந்தது. சரி என்ன டிஃபன் சாப்டறியா ?

இல்ல ..குளிச்சுட்டு சாப்டறேன்..இப்ப காபி போறும்.

கொஞ்சம் இரு...இன்னும் பால் வரலை...இப்ப வந்துரும்..

ஆங்...தெரியும்????...நான் அதுக்குள்ள ட்ரெஸ் மாத்திட்டு வரேன்...

வீட்டில் இருந்த ரெண்டு வாண்டுகள் பிடித்துக் கொண்டது....அங்கிள் எனக்கு வீடியோ கேம்ஸ் கொண்டு வந்திருக்கேளா ?....

இருக்குடா...அப்புறம் எடுத்து தரேன்....இப்ப கொஞசம் மூச்சு விட விடுங்க..

பல்லை தேய்ச்சு...(மாடில) ...திருப்பி கீழ போனேன்...காபி தயாராகிக் கொண்டு இருந்தது.

சரி குழந்தையை பாத்து நாளாச்சேன்னு ரூமுக்குள்ள போனேன்... அரைத்தூக்கத்தில் புரண்டு கொண்டு இருந்தது. பாத்து அப்பான்னு சிரிக்கும்னு நெனச்சா.. பேயை பாத்த மாதிரி அலறியது. "ஏன்..வந்ததும் வராதுமா...அத அழவிடறீங்க!?...தர்ம பத்தினி கடுகடுப்பு..." - அவளுக்கு தூக்கம் கலைந்த கடுப்பு..